“அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம்”- ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்

Rajini-makkal-mandram-request-to-district-secretary

மாநில தலைமையின் அனுமதியின்றி எந்தவொரு அறிக்கையையும் பகிர வேண்டாம் என மாவட்டச் செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ரஜினி மக்கள் மன்ற அனைத்து மாவட்டச் செயலாளர்கள், மாநில தலைமையின் அனுமதியின்றி தன்னிச்சையாக எந்தவொரு அறிக்கையையும் பத்திரிகைகள், ஊடகங்கள், மூலமாகவோ மற்றும் மாவட்ட வாட்ஸப் குழுக்கள் மூலமாகவே பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement