மோடி விரும்பியதை நாம் சாப்பிட வேண்டுமா?: ஸ்டாலின் கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனிமனித உரிமைகளில் தலையிடுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடுக்கும் உத்தரவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.


Advertisement

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பசுவதை தடுப்புச்சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் காரணமாக மாடுகள் விற்பனை பாதிக்கப்பட்டு விவசாயிகளின் பொருளாதார சுமை கூடியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின்போது ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 3 ஆண்டு கால ஆட்சியில் மோடி அரசு மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்றும் அவர் சாடினார்.இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து அண்டை மாநில முதல்வர்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், இதுவரை தமிழக அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

கடந்த ஆறு ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 3 முதலமைச்சர்களை கண்டுள்ளதாகவும், 3 முதல்வர்களும் இதுவரை 5 முறை மோடியை சந்தித்து மனு கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஸ்டாலின், இதுவரை அவர்கள் கொடுத்த எந்த கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement