[X] Close >

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்: தவானுக்கு பதிலாக மாயங்க் சேர்ப்பு

Agarwal-named-Dhawan-s-replacement-for-West-Indies-ODIs

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக மாயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். 


Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் கடைசி போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. 


Advertisement

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இடம்பெற்று இருந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டதால் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் ஷிகர் தவானுக்கு பதிலாக கர்நாடக அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சையத் முஷ்டாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close