குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசிற்கு போதிய ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - 2019, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் அல்லாத பிற 6 மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்கிறது. அதாவது இந்த நாடுகளிலிருந்து வந்த இந்து, பௌத்த, சமணம், கிறித்துவ, சீக்கிய மற்றும் பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை அளிக்கிறது. இந்த மசோதா மக்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு இடையே கடந்த திங்கட்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற மொத்தமுள்ள 240 எம்பிக்களில் 121 பேர் ஆதரவு அளிக்கவேண்டும். மாநிலங்களவையின் மொத்த எண்ணிக்கையான 245ல் தற்போது 5 இடங்கள் காலியாக உள்ளன. ஆகவே மீதமுள்ள 240 எம்பிக்களில் 121 எம்பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்தச் சூழலில் இந்தச் சட்டத்திற்கு எதிராக,
காங்கிரஸ்(46),
திமுக(5)
திரணாமுல் காங்கிரஸ்(13)
சமாஜ்வாதி(9)
தெலங்கானா ராஸ்டிரிய சமிதி(6)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(5)
தேசியவாத காங்கிரஸ்(4)
ராஸ்டிரிய ஜனதா தளம்(4)
பகுஜன் சமாஜ்(4)
சிவசேனா(3)
ஆம் ஆத்மி(3)
கம்யூனிஸ்ட்(1)
முஸ்லீம் லீக்(1)
கேரளா காங்கிரஸ்(1)
மதிமுக(1)
மக்கள் ஜனநாயக கட்சி(2)
ஐ.என்.டி(2)
இவர்களுடன் சேர்ந்து ஒரு நியமன எம்பி மற்றும் 2 சுயேட்சைகளும் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த மொத்த எண்ணிக்கையின்படி பார்த்தால் மசோதாவிற்கு எதிராக மாநிலங்களவையில் 112 எதிர்ப்பு தெரிவிக்க உள்ளனர்.
எனவே மீதமுள்ள,
பாஜக(83)
அதிமுக(11)
பாமக(1)
பிஜூ ஜனதா தளம்(7)
ஜனதா தளம்(6)
சீரோமனி அகாலி தளம்(3)
போடோலாந்து மக்கள் முன்னணி(1)
லோக் ஜனசக்தி(1)
நாகா மக்கள் முன்னணி(1)
அசோம் கானா பரிசத்(1)
சிக்கிம் ஜனநாயக முன்னணி(1)
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (2)
உள்ளிட்ட கட்சிகள் மற்றும் 3 நியமன எம்பிக்கள், 4 சுயேட்சைகள் அடங்கிய 128 பேர் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர். ஆகவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா எளிதில் நிறைவேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்