திருப்பத்தூரில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞரை பொதுமக்கள் அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெகன். இவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கத்தில், மனதிற்குள் ஒருதலைப்பட்சமாக காதலை வளர்த்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அப்பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனைதொடர்ந்து ஜெகன் அப்பெண்ணிடம் தனது காதலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் காதலை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை அப்பெண்ணை பின்தொடர்ந்து ஜெகன் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில், ஓடும் பேருந்தில் அப்பெண்ணின் கழுத்தில் அவர் தாலி கட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் ஜெகனை பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.
பின்னர் வாணியம்பாடி காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில், வாணியம்பாடி காவல்துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய சம்பவத்தால் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
நடிகர் விவேக் மறைவு சொல்லிமாளாத வேதனை... துக்கத்தில் தழுதழுத்த திரைப் பிரபலங்கள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்