தீயை அணைப்பதில் தாமதம் ஏன்?...சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Chennai-District-Collector-explains-about-T-Nagar-Fire-rescue-Process

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தாமதம் ஏற்படுவது ஏன் என்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் விளக்கமளித்துள்ளார். 


Advertisement

தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் காலை சுமார் 4.30 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சுமார் 12 மணி நேரத்துக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியாக பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வனிடம், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. கட்டடத்தின் அமைப்பு காரணமாகவே தீயணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், 3 மணி நேரத்தில் முழுவதுமாக தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தீயணைக்கும் பணியில் 125 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 10 நிமிடத்துக்கு ஒரு லாரி தண்ணீர் என்ற வகையில், 50 லாரிகளில் தீயணைக்கும் பணிக்காக தண்ணீர் எடுத்து வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  தீ விபத்தால் தி.நகர் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது. 
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement