“நீங்கள்தான் எப்போதும் எனது கேப்டன்” - 2019ல் ட்விட்டரை கலக்கிய கோலியின் பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

2019ஆம் ஆண்டில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்டது முன்னாள் கேப்டன் தோனிக்கு விராட் கோலியின் பிறந்த நாள் வாழ்த்து செய்திதான்.


Advertisement

2019 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட விஷயங்களின் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில், இந்திய விளையாட்டு வீரர்களின் எந்த ட்வீட் அதிக அளவில் ரீட்விட் செய்யப்பட்டுள்ளது என்ற பட்டியலும் இடம்பெற்றுள்ளது. அதில், தோனிக்கு கேப்டன் விராட் கோலி கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய ட்விட் தான் அதிக அளவில் ரீட்விட் ஆகியுள்ளது. சுமார், 45 ஆயிரத்து 500 பேர் அந்த ட்விட்டை ரீட்விட் செய்துள்ளார்கள். 

                     


Advertisement

விராட் கோலி அந்த ட்விட்டர் பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி. வெகு சிலர் மட்டுமே நம்பிக்கை மற்றும் மரியாதையின் உண்மையாக அர்த்தத்தை புரிந்து கொள்வார்கள். அப்படியான ஒரு நண்பருடன் நான் பல வருடங்கள் நட்புடன் இருந்துள்ளேன். எங்கள் எல்லோருக்கும் நீங்கள் பெரிய அண்ணன். நான் ஏற்கனவே சொன்னது போல் எப்போதும் நீங்கள்தான் எனது கேப்டன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

       

அத்துடன், இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்திலும், தோனி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். வீராங்கனைகளை பொறுத்தவரை பிவி சிந்து முதலிடத்திலும், ஹிமா தாஸ், சானியா மிர்ஸா அடுத்த இரண்டு இடங்களையும் பிடித்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement