[X] Close >

28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்

Confirmed--Meena-to-star-in-Thalaivar-168

‘தலைவர்168’ படத்தில் நடிகை மீனாவும் குஷ்புவும் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆகவே இது குறித்த செய்திகள் அனைத்தும் ‘தலைவர் 168’ என்றே பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேட் செய்தி வெளியாகி உள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தில், நடிகை மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்கெனவே சில தகவல்கள் கசிந்து வந்த நிலையில், இன்று அதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.


Advertisement

மீண்டும் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க இருப்பது குறித்து மீனா ஒரு வீடியோ பேட்டியை கொடுத்துள்ளார். அதில், “சிறுத்தை சிவா இயக்கத்துல சன் பிக்ச்சர் தயாரிப்புல ‘தலைவர் 168’ படத்துல நடிக்கிறேன். இந்தத் தயாரிப்புல என் முதல் படம். அதே போல சிறுத்தை சிவா இயக்கத்துலயும் இது எனக்கு முதல் படம். அதுக்கு மேல ரஜினி கூட ரொம்ப நாளைக்கு அப்புறம் ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இந்தப் படத்துல நான் நடிக்க போறேன். பெரிய எதிர்பார்ப்புல இருக்கேன். இது நல்ல கதை. இதுல எனக்கு நல்ல கேரக்டர். படத்துல நான் வர்ற இடங்கள் எல்லாம் ரொம்ப கலகலப்பா இருக்கும். இதை உறுதியா நான் சொல்வேன். எப்ப படப்பிடிப்பு ஆரம்பமாகும்னு ரொம்ப எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மீனா, இதற்கு முன்பாக  ‘எஜமான்’ ‘வீரா’ , ‘முத்து’ போன்ற படங்களில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். அத்தனை படங்களும் பெரிய அளவில் வெற்றியை ஈட்டின. மேலும் மீனா, ரஜினிகாந்த் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

இதனிடையே இப்படத்தில் நடிகை குஷ்புவும் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. அண்ணாமல், பாண்டியன் உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார். மன்னன் படத்திலும் ரஜினியுடன் நடித்திருந்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close