“கல்வி கற்க முடியாமல் பிச்சை எடுக்கும் சிறுவர்கள்”- தாயின் மதுப்பழக்கத்தால் தடுமாறிய பரிதாபம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஞ்ஞானியாகவும், காவல்துறையில் சேவையாற்ற வேண்டும் என்ற கனவுடனும் மிதக்கும் இரு சிறுவர்கள், பள்ளி படிப்பை தொடர முடியாமல் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்றனர்.


Advertisement

கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சைப் புகினும் கற்கை நன்றே. என்ற பழமொழிக்கு ஏற்ப பிச்சை எடுத்தாவது குழந்தைகளுக்கு கல்விக் கண் திறந்து வைக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த எண்ணத்திற்கு மாறாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே வசிக்கும் தாய் ஒருவர், கல்வி கற்க ஆசைப்படும் இரு குழந்தைகளையும் பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டு பிச்சை எடுக்க வைத்து வருகிறார். போதைக்கு அடிமையான அந்த தாயால், இரு குழந்தைகளும் எதிர்காலத்தை தொலைத்து நிற்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.


Advertisement

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, தாயின் மதுப் பழக்கத்திற்காக, விருப்பம் இல்லாமல் பிச்சை எடுத்து வரும் இரு சிறுவர்களையும் மீட்டு, நல்ல கல்வி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதை அறிந்த சார் ஆட்சியர் சரவணன், காமாட்சி அம்மன் கோயில் வாசலில் தங்கியிருக்கும் இரு சிறுவர்களையும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இரு சிறுவர்களையும் பெற்ற தாயே கைவிட்ட நிலையில், அவர்களை நன்றாக படிக்க வைத்து, நாட்டிற்கு சேவையாற்றும் அளவுக்கு வளர்த்து விடும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement