காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி கார்த்திகாவுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்தனர். குழந்தை பிறந்ததிலிருந்து குழந்தை பால் குடிப்பதற்கு சிரமப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை 4.30 மணி அளவில் குழந்தைக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கார்த்திகா அங்கு பணியில் இருந்த செவிலியர் சுதாவிடம் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவரிடம் காட்ட வேண்டும் என கூறியுள்ளார். ஆனால், பணியிலிருந்த செவிலியர் சுதா குழந்தையின் மூச்சு திணறலை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காலை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.
நேரம் செல்ல செல்ல குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாகி கை, கால்கள் அனைத்தும் செயலிழக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் கார்த்திகா கூச்சலிட்டுள்ளார். அதன் பின்னரே குழந்தைக்கு காலை 7 மணி அளவில் சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 7.30 மணி அளவில் குழந்தை உயிரிழந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், செவிலியர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழந்தையின் தாய் கார்த்திகா தெரிவிக்கையில், “செவிலியரிடம் குழந்தைக்கு மூச்சு அடைக்கிறது என்று தெரிவித்த போது, வெளியில் உட்காருங்கள் மருத்துவர் வருவார் என்று சொல்லிவிட்டார். செவிலியர் குழந்தையை தொட்டுக் கூட பார்க்க வில்லை.
மீண்டும் ஒருமுறை சென்று சொன்னபொழுது வெளியிலே உட்காருங்கள் மருத்துவர் வந்து பார்ப்பார்கள் என்று மிரட்டும் தொனியில் சொன்னார்கள். காலை 7 மணி அளவில் குழந்தையின் கை, கால்கள் செயல் இழந்த நிலையில், செவிலியரிடம் சண்டை போட்ட பிறகுதான் குழந்தையை மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். அதுவரை அவர்கள் என் குழந்தையை கண்டு கொள்ளவே இல்லை” என கண்ணீர் மல்க கூறினார்.
Loading More post
“மாணாக்கர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்” - தேர்வுகளை ரத்து செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை!
மேற்கு வங்க தேர்தல்: பரப்புரை தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்
”மேற்கு வங்கத்தில் பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது; ஆனால்...!” - பிரசாந்த் கிஷோர்
கேரளாவில் இருந்து தமிழகம் வர இ பாஸ் கட்டாயம்: எல்லையில் சோதனையை தீவிரப்படுத்தும் போலீசார்!
அதிகரிக்கும் கொரோனா: 10 மாநிலங்களில் உயர்மட்ட குழுக்களை களமிறக்க மத்திய அரசு திட்டம்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!