வாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கால் வெயிட்டிங் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது


Advertisement

உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. பயன்படுத்த எளிதாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் கொண்டு வரப்படுகின்றன.

முதலில் சேட்டிங் ஆப்ஷணை மட்டும் கொண்டிருந்த வாட்ஸ் அப், பிறகு வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் என பல வசதிகளை வழங்கியது. 4 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் காலிங் வசதி அறிமுகமானது. 


Advertisement

இந்நிலையில் தற்போது வாய்ஸ் காலிங்கில் அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி கால் வெயிட்டிங் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது. தற்போது ஒருவருடன் சாதாரண அழைப்பிலோ அல்லது வாட்ஸ் அப் அழைப்பிலோ பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மற்றொரு வாட்ஸ் அப் அழைப்பு கொடுக்க முடியாது. அந்த அழைப்பு தானாகவே நிராகரிக்கப்பட்டுவிடும். ஆனால் தற்போது வேறு அழைப்பில் இருக்கும் போது வாட்ஸ் அப் அழைப்பு வெயிட்டிங் காலாக இருக்கும். 


Advertisement

இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் வெர்ஷனுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதுவரை இந்த வசதியை பெறாதவர்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் வெயிட்டிங் கால் வசதி கிடைக்கப்பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement