உன்னாவ் பெண்ணின் உடல் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட உன்னாவ் பெண்ணின் உடல் பலத்த பாதுகாப்புடன் ‌நல்லடக்கம் செய்யப்பட்டது.


Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்‌டத்தில் உள்ள அப்பெண்ணின் சொந்த கிராமத்தில் அ‌வரது உடல் அடக்கம் நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்களும் அதிகாரிகளும் திரளாக கலந்து கொண்டு உன்னாவ் பெண்‌ணுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

முன்னதாக அப்பெண்ணின் உடலுக்கு உத்தர‌ப்பிரதேச அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் கமல் ராணி வ‌ருண் ஆகியோர், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, முதலமைச்சர் வந்தால்தான் உடல் அடக்கம் செய்யப்படும் என அந்த பெண்ணின் வீட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் அதிகாரிகள் வந்ததை அடுத்து, உடல் நல்லடக்கம் செய்ய அவர்கள் ஒத்துக் கொண்டனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement