[X] Close >

தெலுங்கு சினிமா இயக்குனர் தசரி நாராயணராவ் மறைவு... ரஜினி, கமல் இரங்கல்

Telugu-film-director-Dasari-Narayana-passes-away

தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான தசரி நாராயணராவ் உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 


Advertisement

தமிழ், தெலுங்கு, இந்தியில் 151 படங்களை இயக்கியுள்ள தாசரி நாராயணராவ், மன்மோகன் சிங் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை இணையமைச்சராக பதவி வகித்தவர். தெலுங்கு சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக அறியப்பட்ட அவர், 50 படங்களுக்கு மேல் தயாரிக்கவும் செய்துள்ளார். கடந்தசில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலமானார். தாசரி நாராயணராவின் மறைவு இந்திய சினிமாவுக்கே பேரிழப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குனர் கே.பாலச்சந்தர் பார்த்து வியந்தவர் தாசரி நாராயணராவ் என்று நடிகர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close