தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை என்கவுன்ட்டர் செய்த தெலங்கானா காவல்துறையினருக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டி உள்ளனர். 


Advertisement

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர் உட்பட 4 பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விசாரணைக்காக அழைந்து சென்றபோது காவலர்களிடமிருந்து அந்த நான்கு பேரும் தப்பிக்க முயன்றனர். 


Advertisement

அப்போது தெலங்கானா காவல்துறையினர் அந்த நான்கு பேரையும், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திலேயே என்கவுன்ட்டர் செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனித உரிமை ஆர்வலர்கள் பலர் இந்த என்கவுன்ட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் வரவேற்பும் எதிர்ப்பும் ஏற்பட்டு உள்ளது. தெலங்கானாவில் பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி காவலர்களுக்கு தங்களின் ஆதரவைத் தெரியப்படுத்திய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில் தெலங்கானா போலீசாரின் இந்தச் செயலுக்கு பாராட்டு தெரிவித்து மதுரையிலுள்ள அஜித் ரசிகர்கள், என்கவுன்ட்டருக்கும், சுட்டுக்கொன்ற காவல்துறைக்கும் வாழ்த்து தெரிவித்து மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement