உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்
உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். அதே வேளையில் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், 37,380 பதவிகளுக்கு முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் என்றும், 38,914 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30 அன்று தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்க தடையில்லை. ஏற்கெனவே பொங்கல் பரிசு வழங்குவது தொடங்கியுள்ளதால் அதற்கு தடையில்லை என தெரிவித்துள்ளார்.
Loading More post
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்