[X] Close >

பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல்... டியூசன் மாஸ்டர் கைது..!

Hosur-teacher-was-arrested-for-sexual-abuse

ஓசூர் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக டியூசன் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நல்லூர் கிராமத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாலை நேரங்களில் அதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்பவர் சிறப்பு வகுப்பு சொல்லி கொடுத்து வந்துள்ளார்.


Advertisement

இந்நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியை ஆனந்த் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி சத்தம் போட்டதால் காப்பக உரிமையாளர் மற்றும் அருகிலிருந்தவர்கள் மாணவியை வந்து காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து காப்பகத்தின் உரிமையாளர் மீனா, ஒசூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் உண்மை தெரிய வந்ததை அடுத்து ஆனந்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close