மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் பேச்சை 12ஆம் வகுப்பு மாணவி மொழிபெயர்த்து அசத்தினார்.


Advertisement

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி-யான ராகுல் காந்தி, இன்று பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசத் தொடங்கிய அவர், தனது பேச்சை யாராவது மொழிபெயர்ப்பு செய்கிறீர்களா ? என கேள்வி எழுப்பினார். அவர் அப்படி கேட்டதும், மேடையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் புன்னகைத்தார்.


Advertisement

இதையடுத்து கூட்டத்திலிருந்து 12ஆம் வகுப்பு மாணவி சஃபா செபின் மேடை ஏறி, தான் மொழிபெயர்ப்பதாக கூறினார். அவரை கை தட்டி ஆரவாரத்துடன் மற்ற மாணவர்கள் உற்சாகப்படுத்தினர். மேடை ஏறியதும் அந்த மாணவி ராகுலுக்கு வணக்கம் கூற, பதிலுக்கு ராகுல் கையை குலுக்கி மரியாதை செய்தார். பின்னர் ராகுல் காந்தி பேசத் தொடங்கியதும், அந்த மாணவி கவனத்துடன் அதனை மொழிபெயர்த்து அசத்தினார். அவரது பேச்சுக்கு மாணவர்கள் கை தட்டினர் ஆதரவளித்தனர்.

ராகுல் காந்தி பேசும் போது, பள்ளி மாணவி ஒருவர் பள்ளியிலேயே பாம்பு கடித்த விவகாரம் தொடர்பாக அரசை கண்டித்து பேசினார். பேசி முடித்த பின்னர் நன்றாக மொழிபெயர்த்தாக மாணவியை ராகுல் பாராட்டினார். மாணவி கூறும் போது, தனது வாழ்வில் இது மறக்க முடியாத நாள் என்று கூறினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement