ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் மும்பையில் நடைபெற்ற நிலையில், குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், தற்போதுள்ள 5.15 சதவிகிதமே தொடரும் எனவும் அறிவித்துள்ளது. அதேபோல, ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 4.90 சதவிகிதம் என்ற பழைய நிலையே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய 5 நிதிக்கொள்கைகளில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 1.35 சதவிகிதம் குறைத்து அறிவித்திருந்தது.
6ஆவது முறையாக இன்றும் கால் சதவிகிதம் வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடன் விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக ரெப்போ விகிதங்களை மாற்றாமல் இருப்பதாக தெரிவித்துள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் வட்டி விகிதங்களை குறைக்க இடம் இருப்பதாக தெரிவித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்து வந்தாலும் நிர்ணயித்த இலக்கிற்குள் இருப்பதாகவே ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே இந்தமுறை வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாததே பொருத்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் நிதியாண்டின் 2ஆவது அரையாண்டில் பணவீக்கம் 5 புள்ளி 1 சதவிகிதத்திலிருந்து 4 புள்ளி 7 சதவிகிதமாகவும், 2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பணவீக்கம் 4 சதவிகிதத்திலிருந்து 3 புள்ளி 8 சதவிகிதமாகவும் குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு