“என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது”- வீடியோ மூலம் நித்யானந்தா சவால்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெளிநாட்டிலிருந்து கொண்டு புதிதாக வீடியோ வெளியிட்டிருக்கும் நித்யானந்தா, தான் ஒரு புறம்போக்கு என்றும், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் சவால் விடுத்துள்ளார்.  


Advertisement

பாலியல் புகார், சிறுமிகளை அடைத்துவைத்து சித்ரவதை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக நித்தியானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றாலும், ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி தங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு கைலாசம் என்று பெயர் சூட்டி தனிநாடு போல மாற்ற முயற்சிகள் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. 


Advertisement

கைலாசத்தில் தனது பக்தர்களுடன் நித்யானந்தா தங்கியிருப்பதாகவும், அங்கிருந்து கொண்டுதான் சிஷ்யைகள் மூலம் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் இமயமலையில் அவர் தங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. இந்நிலையில் ஒன்றரை மணி நேரம் வீராவசனம் பேசி புதிதாக வீடியோ வெளியிட்டிருக்கும் நித்யானந்தா, தான் ஒரு புறம்போக்கு என்றும், தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.

தொலைவில் இருந்தாலும், தனது ஆசிரமங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், மான அவமானத்திற்கு கவலைப்படவில்லை என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். 'நான் ஜாலியா இருகிறதை பார்த்து ஏன் வயிறு எரிய வேண்டும், முடிந்தால் நீங்களும் ஜாலியா இருங்க' என்று புத்தியும் சொல்லியிருக்கிறார்.


Advertisement

அந்த வீடியோவில் வார்த்தைக்கு வார்த்தை பரமசிவனை துணைக்கு வைத்து கொண்டு பேசும் நித்யானந்தாவை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், அதற்குள் கைலாசத்தை தனிநாடு போல மாற்றி தன்னை இந்து மத தலைமை பீடமாக அறிவிக்க நித்யானந்தா திட்டமிட்டுளதாக கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement