ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்.. அதிமுக சார்பில் அமைதிப் பேரணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காலஞ்சென்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Advertisement

அதிமுக சார்பில் காலை சுமார் 9.30 மணி அளவில், அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில் அதிமுகவின் கூட்டணி கட்சியினரும் பங்கேற்க உள்ளனர்.


Advertisement

இதனைத்தொடர்ந்து அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. இதேபோல் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ.தீபா, திவாகரன் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

ஜெயலலிதாவின் நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement