பேண்ட் பாக்கெட்டிலிருந்து தவறி விழுந்த பணத்தை லாவகமாக எடுத்த பெண்-சிசிடிவி காட்சிகள்

Unidentified-Women-steals-32-thousand-ruppees-from-a-man-in-coimbatore

பைக்கிலிருந்து தவறிவிழும் பணத்தை பெண் ஒருவர்  லாவகமாக எடுத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Advertisement

கோவை ஆலாந்துறை அடுத்த சிறுவாணி மெயின் ரோட்டில் தனியார் கணினி பயிற்சி மையம் ஒன்று சுமார் ஐந்தாண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் ஜெராக்ஸ் மிஷின் ஆப்ரேட்டராக பணியாற்றி வருபவர் மதன்குமார். இவர் கடந்த 29ஆம் தேதி இரவு பணியை முடித்த பின் அலுவலத்தில் இருந்த வருமான பணமான ரூபாய் 32 ஆயிரத்தை முதலாளியின் வீட்டில் ஒப்படைக்க சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாத நிலையில், அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு இரு சக்கர வாகனத்தை தள்ளிச் சென்றுள்ளார்.


Advertisement

அந்த நேரத்தில் அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்சிலிருந்து 32 ஆயிரம் ரூபாய் தவறிக் கீழே விழுந்ததை அறியாமல் சென்று விடுகிறார். இதனைத் தொடர்ந்து மதன் பெட்ரோல் பங்கிற்கு சென்றபோது பணத்தை தவற விட்டதை கண்டறிந்துள்ளார். உடனே வந்தவழியிலே தேடிச்சென்று பார்த்துள்ளார். ஆனால் பணம்  கிடைக்கவில்லை.

இது குறித்து தனது முதலாளியிடம் மதன் தெரிவித்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக காருண்யா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், விசாரணை செய்ததில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், பைக்கிலிருந்து பணம் தவறுவதும், ஒரு அடையாளம் தெரியாத பெண்மணி அந்தப் பணத்தை எடுத்து செல்வதும் பதிவாகியுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement