சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நிலை என்ன ?

What-are-the-status-of-Lakes-which-supply-water-to-Chennai-City

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய 5 ஏரிகளில் உள்ள நீர் இருப்பு நிலவரங்களை தெரிந்து கொள்வோம்.


Advertisement

Image result for chembarambakkam lake

3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1,887 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 309 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 89 கன அடியாகவும் இருக்கிறது.


Advertisement

Image result for poondi lake

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன்‌ கன அடியில், 228 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் இருக்கிறது. ஏரிக்கு 412 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Image result for puzhal lake


Advertisement

3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 1,103 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 615 கன அடியாக உள்ள நிலையில், நீர் வெளியேற்றம் 25 கன அடியாக உள்ளது.

Image result for veeranam lake

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 1,518 மில்லியன் கன அடி அளவிற்கு நீர் இருக்கிறது. ஏரிக்கு வினாடிக்கு 1,436 ‌கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 389 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில், 1,087 மில்லியன் க‌ன அடி அளவிற்கு நீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 2,933 கன அடியாக உள்ள நிலையில், அதே அளவிற்கு நீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement