உள்ளாட்சித் தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உள்ளாட்சித் தேர்தலில் தொகுதி வரையறை முறையாக செய்யவில்லை என திமுக தரப்பில் புதிதாக ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், தமிழக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


Advertisement

அதில் “முழுமையாக தொகுதி வரையறை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் என அனைவரிடமும் கருத்துகளை பெற்றே தொகுதி வரையறை செய்திருக்கிறோம். 20 ஆயிரத்திற்கும் அதிகமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் 8 ஆயிரத்தை அனுமதித்துள்ளோம்” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் கமலா ஹாரிஸ்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த பிரமாணப் பத்திரத்தை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement