“திருநங்கைகளே படிக்காத மத்திய பல்கலைக் கழகங்கள்” - அரசு தந்த அதிர்ச்சி தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருநங்கைகளாக மாறிய மாணவர்கள் உயர் பல்கலைக்கழகங்களில் நேரடியாக சேர்ந்து படிப்பதைவிட திறந்த பல்கலைக்கழகங்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பது அரசு தெரிவிக்கும் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. கேலி மற்றும் பாலினப் பாகுபாடு தொடர்பான இன்னல்களை தவிர்ப்பதற்காகவே இத்தகைய முயற்சியை அவர்கள் எடுப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.


Advertisement

கடந்த திங்கள்கிழமை உயர்க்கல்வியில் திருநங்கைகளின் எண்ணிக்கை விவரங்கள் குறித்த விவரங்கள் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்மூலம் இந்த உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுளது. அந்தத் தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 814 திருநங்கைகள் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ)  சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் ஆனால் மத்திய பல்கலைக் கழகங்களில் யாரும் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்களில் திருநங்கை வகுப்பைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்பிக்கும் வேலையிலோ அல்லது கற்பித்தல் துறை அல்லாத பணிகளிலோ அமர்த்தப்படவில்லை என்றும் அரசாங்கம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

ஆனால் இந்தப் புள்ளிவிவரம் முழுமையான ஒரு சித்திரத்தை வழங்குவதாக இல்லை என்று சில வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில் திருநங்கைகள் பெரும்பாலும் தங்களது அடையாளத்தை அதிகம் வெளிப்படுத்த முன்வருவதில்லை. சமூகத்தில் எழும் தவறான மனநிலை அவர்களை வெளியே அடையாளப்படுத்திக் கொள்வதை தவிர்க்கிறது என்கின்றனர்.

திருநங்கைகளுக்கான சட்டப் பிரிவின் கீழ் சம உரிமை உண்டு என்றும், மூன்றாம் பாலினத்திற்கு சட்டபூர்வமான அந்தஸ்தை வழங்குவதாக உச்சநீதிமன்றம் 2014 ஆண்டிலேயே ஒரு வரலாற்று தீர்ப்பை தீர்ப்பளித்தது. திருமணம் மற்றும் சொத்துரிமையை பெறுவதற்கான உரிமையைத் தவிர, அவர்கள் வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு பெறவும் தகுதியுடையவர்கள் என்றும் உச்சநீதிமன்றம் கூறிவுள்ளது. இருந்தாலும் அவர்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் இன்னும் நடைமுறையில் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Advertisement

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, நாட்டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் திருநங்கைகளின் எண்ணிக்கை மற்றும் அதில் கற்பிக்கும் பணியில் உள்ள திருநங்கை ஊழியர்கள், கற்பித்தல் அல்லாத பிறத்துறை ஊழியர்கள் குறித்தும் பல்கலைக்கழகங்கள் வாரியான விவரங்களை கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்', “மனிதவள மேம்பாட்டு அமைச்சக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் படி,  இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை  பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு பல்கலைக்கழகங்களிலும் திருநங்கைகள் படிக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 814 திருநங்கைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் திருநங்கைகள் யாரும் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்களாக வேலை செய்யவில்லை” எனத் தெரிவித்தார். உயர்கல்வி தொடர்பான இந்திய அளவிலான கணக்கெடுப்பு 2018-19 இன் படி, உயர்கல்வியில் திருநங்கைகளைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் விளக்கினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement