முழுக் கொள்ளளவை எட்டும் மதுராந்தகம் ஏரி - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

madurantakam-lake-water-level-is-increased

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிரம்பி வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

கடந்த இருதினங்களாக பெய்த கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, முழுக் கொள்ளளவான 23 புள்ளி 3 அடியில் 22 அடியை எட்டியுள்ளது. மேலும், நீர்வரத்து ஆயிரம் கனஅடியாகவும், நீர் இருப்பு 655 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. இதன் காரணமாக ஏரி நிரம்பியதும் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

குறிப்பாக முன்னூத்தி குப்பம், முருக்கஞ்சேரி, கட்டுச்சேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுராந்தகம் ஏரியை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், ஏரி முழு கொள்ளளவை எட்டவுள்ளதால் ஏரியை பார்வையிட மக்களுக்கு ‌தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement