ரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை மீனா? - ரசிகர்கள் உற்சாகம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரஜினிகாந்த்துடன் இணைந்து மீண்டும் நடிகை மீனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  


Advertisement

‘தர்பார்’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இதற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. ஆகவே ‘தலைவர் 168’ என்ற பெயரிலேயே செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ரஜினிகாந்த் பிறந்த நாளான 12 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிகிறது.


Advertisement

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை மீனா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் பரோட்டோ சூரியும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில்தான், மீனா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினியும் மீனாவும் இணைந்து நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றியை ஈட்டி உள்ளன. ஆகவே இவர்கள் இணைவது குறித்து ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.  ‘எஜமான்’,  வீரா’,  ‘முத்து’ ஆகிய படங்கள் அதற்கு சரியான உதாரணம். ‘முத்து’  திரைப்படம் இந்தியாவை கடந்து ரஜினிக்கு ஜப்பான் ரசிகர்களை கூட சம்பாதித்து கொடுத்தது. 

இதற்கும் மேல் சொன்னால் 1984ல் வெளியான ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். அப்படமும் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இதனிடையே, கீர்த்தி சுரேஷூம் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement