உள்ளாடையை வைத்து கொடூரக் கொலைகாரனை பிடித்த போலீஸ் - பள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கர்நாடகாவிலுள்ள கல்புர்கி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை சிறுமி ஒருவர் பாலியல் வன்கொமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. வடிகால் அருகே கிடந்த எட்டு வயது சிறுமியின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சிறுமி காணாமல் போனதாக வந்த புகாரின் பேரில் அவர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சூல்பேட் காவல்துறையும் உள்ளூர்வாசிகளும் இணைந்து சிறுமியின் உடலைக் கண்டுபிடித்தாக தெரியவந்துள்ளது.


Advertisement

கடந்த திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில்,கல்புர்கி என்னும் கிராமத்தில் வசிப்பவர்கள், அங்கன்வாடி அருகே எல்லப்பா என்ற 35 வயது மதிக்கத்தக்க நபருடன் சிறுமி நடந்து செல்வதைக் கண்டுள்ளனர். அப்போது எல்லப்பா அரசுப் பள்ளிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்குதான் அந்தச் சிறுமி 2 ஆம் வகுப்பில் படித்து வந்தார்.

அப்போது சிறுமி ஒரு சாக்லேட் வாங்க வெளியே வந்துள்ளார். அதன் பிறகு மாலை 4.30 மணி ஆகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை எனத் தெரிகிறது. உடனே ​​அவளுடைய பெற்றோர் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். வீடு திரும்பாத தங்களது மகளை விசாரிக்க பள்ளிக்குச் சென்றனர். மாணவர்களும் ஆசிரியர்களும் சிறுமியின் பெற்றோரிடம் அவர் பள்ளிக்கு வரவில்லை என்றும் அவள் ஒருநாள் விடுமுறை எடுத்திருப்பதாகவே தாங்கள் கருதியதாகவும் கூறுயுள்ளனர்.

பின்னர் பதட்டமடைந்த அவரது பெற்றோர் சூல்பேட் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று தங்களின் மகள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளதனர். ஆறு பேர் அடங்கிய காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு, நெடுஞ்சாலையில் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காணமல் போனச் சிறுமியைத் தேடி உள்ளனர்.


Advertisement

இதற்கிடையில், சிறுமியின் பெற்றோரும் ஒரு தேடலை நடத்தி உள்ளனர். கூடவே கிராமத்தில் வசிப்பவர்களும் அவர்களுடன் இணைந்து சிறுமியைத் தேடத் தொடங்கியுள்ளனர். இரவு 7.30 மணியளவில், ஒரு குடியிருப்பு அருகே பேட்டரி மூலம் இயக்கப்படும் எல்.ஈ.டி விளக்கு கம்பத்தில் கிழிந்த ஆடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் துணி சிறுமி உடுத்தி இருந்தது என தெரியவந்தது. 

கழிவு நீர் வடிகால் அருகே கிடைத்த சிறுமி தொண்டையில் வெட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளார். அவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக சூல்பேட் போலீஸார் சந்தேகித்தனர். இது சம்பந்தமான விரிவான செய்தியை தி நியூஸ் மினிட் பதிவு செய்துள்ளது. மேலும் போலீஸார் இந்த இணைய தளத்துடன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், எல்லப்பாவை தேடி வந்த போலீசுக்கு கடந்த திங்கள்கிழமை ஒரு தகவல் கிடைத்துள்ளது. எல்லப்பா ஒரு பெண்ணுடன் தங்கி இருப்பதாக கிராமவாசிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவரைப் பிடித்துள்ளனர். இது குறித்து “சிறுமியின் உடலுக்கு அருகில் ஆணின் ஒரு ஜோடி உள்ளாடைகளைக் கண்டோம். நாங்கள் எல்லப்பாவைக் கண்டபோது, ​​அவர் சதுக்கத்தின் அருகில் தங்கி இருந்தார். அவரது உடைகள் இரத்தக்கறையுடன் இருந்தன. மேலும் அவர் குடிபோதையில் இருந்தார். சிறுமியை கடத்தியபோதும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார். ஆகவே நாங்கள் அவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம், ”என்று சூல்பேட் போலீசார் கூறியுள்ளனர்.

மேற்கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை எல்லப்பா ஒப்புக்கொண்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் பிரிவு 302 மற்றும் 376 பிரிவுகளின் கீழ் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்கு தற்போது கர்நாடகாவில் கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement