17 பேர் இறப்புக்காக போராடிய 24 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடுகோரி போராடிய 24 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

மேட்டுப்பாளையத்தில் பங்களா வீடு ஒன்றின் சுற்றுச்சுவர் கருங்கற்களால் கட்டப்பட்டது. அந்தச் சுற்றுச்சுவரின் உயரம் 20 அடியாகும். 80 அடி நீளம் கொண்ட அந்தக் கருங்கல் சுற்றுச்சுவரின் அகலம் 2 அடியாகும். தொடர் மழையின் காரணமாக 3 ஆள் உயரம் கொண்ட அந்தச் சுவரின் ஒரு பகுதி அருகில் இருந்த மண் வீடுகள் மீது விழுந்தது.

          


Advertisement

அதிக எடை கொண்ட கருங்கல் சுவர் விழுந்ததால் மண்ணால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் தரைமட்டமாயின. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதனிடையே, சுற்றுச்சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

          

இந்நிலையில், 17 பேரின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடுகோரி போராடிய 24 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கைதான 24 பேரையும் சிறையில் அடைக்க மதுக்கரை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement