வறுமை தாங்காமல் மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட நிலையில், அவரது வீட்டில் அவரது மகனும் மனைவியும் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். 


Advertisement

தென்காசி மாவட்டத்தில் கட்டளை குடியிருப்பு பகுதியில் வறுமை காரணமாக மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு  ஆட்டோ டிரைவர் கந்தசாமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று காலை கந்தசாமி வீட்டு கதவு பூட்டி இருந்த நிலையில் உறவினர்கள் அதிக நேரம் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.


Advertisement

அப்போது கந்தசாமி தூக்கில் தொங்கிய நிலையில் அருகே அவரது மனைவி இரத்தம் கக்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். கூடவே 6 வயது குழந்தை ஒன்று கழுத்தில் துண்டால் நெரிக்கப்பட்ட இறந்து கிடந்துள்ளது. இந்நிலையில்  சுவரில் எங்கள் சாவிற்கு வறுமை தான் காரணம் என எழுதி இருந்து. உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரை வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் கந்தசாமி தூக்கில் தொங்கி இறந்துள்ளார்  எனத் தெரியவந்துள்ளது. மேலும் மற்றொரு மகன் ஏகாந்த மூர்த்தி என்ற 2 வயது சிறுவன் மட்டும் வீட்டிற்குள்ளிருந்து உயிருடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement