கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டநிலையில் தற்போது அவர் எழுதிவைத்திருந்த கடிதம் கிடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த சிங்கம் என்பவரது மகன் பாலாஜி. இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இதைத்தொடர்ந்து பாலாஜி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவர் பாலாஜி தனது நோட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதைப்பார்த்த பெற்றோர் அந்தக் கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்தக் கடிதத்தில் “என் சாவுக்கு காரணம் ரவி. அவன் என்னை கொடுமை செய்தான். எனது ரத்த கண்ணீருக்கு காரணம் ஆசிரியர் ரவி தான். எனது சொந்த பந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் எனது வணக்கங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி