உச்சநீதிமன்றம் வழங்கிய அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் 

Ayodhya-case--Jamiat-Ulema-e-Hind-files-first-review-plea-in-Supreme-Court

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜாமியாத் உலாமா இ இந்த் என்ற அமைப்பு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.


Advertisement

சர்ச்சைக்குரிய அயோத்தி நில வழக்கில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, ராம் லல்லாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அந்த இடத்திற்கு பதிலாக, இஸ்லாமிய அமைப்புகள் ‌மசூதி கட்டிக் கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. ‌


Advertisement

இந்த வழக்கில் ஒரு மனுதாரரான, சன்னி வக்ஃபு வாரியம் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்யப் போவதில்லை என கூ‌றியிருந்தது. அதே சமயம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 5 ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் மூல மனுதாரரான சித்திக்கியின் சட்டப்பூர்வ வாரிசுதாரரான மவுலானா சையது அஷாத் ரஷிதீ என்பவர், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். ‌ஜாமியாத் உலாமா இந்த் அமைப்பின் தலைவரான இவர், சீராய்வு மனுத் தாக்கல் செய்வதற்கான உரிமையை நீதிமன்றம் தங்களுக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்தார். 


Advertisement

கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக கூறி‌தான் வ‌ழக்கு தொடரப்பட்டது என்றும், ஆனால், கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்திருப்பதன் மூலம், இஸ்லாமியர்களின் நியாயம் வென்றுள்ளது எனக் கூறினார். இருந்தபோதும் இறுதித் தீர்ப்பு எதிராக அமைந்திருப்பதால், சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார்.

இதே போல் அகில இ‌ந்திய இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியமும், சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement