மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

Covai-district-Collector-Rasamani-said-that-the-remaining-wall-will-be-demolished-today

கோ‌வை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீதமுள்ள சுற்றுச் சுவர் இன்று இடிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.


Advertisement

மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஆதி திராவிடர் காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் சுற்றுச்சுவரின் மீதமுள்ள பகுதிகள் இன்று இடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்‌ ராசாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறையிடம்‌ பேசிய அவர், சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மீதமுள்ள சுற்றுச்சுவரை பாதுகாப்பாக இடிக்க வேண்டியுள்ளதாகக் கூறினார். 


Advertisement

தலைமறைவாக உள்ள சுற்றுச்சுவர் வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியிருப்பதாகக் தெரிவித்தார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement