குஜராத்தில் ரூ.90 லட்சம் பணத்தை மழையாக கொட்டி, மணமகன் ஊர்வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
வட மாநிலங்களில் விழாக்கள், ஆன்மிக கச்சேரிகள் நடந்தால் ரூபாய் நோட்டுகளை வீசி இறைப்பது வழக்கம். இசை கச்சேரிகளில் வீசி எறியப்படும் பணங்கள் இசை கலைஞர்களை சேரும். வசதிக்கேற்ப பண மழை பொழிவது அங்கு வழக்கம். இசை கச்சேரிகளில் ரூ.50 லட்சம் வரை பணம் மழை கொட்டியுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் ரூ.90 லட்சம் பணத்தை மழையாக கொட்டி, மணமகன் ஊர்வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
குஜராத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷிராஜ்சிங் ஜடேஜா தனது திருமண ஊர்வலத்தில் ரூ.90 லட்சத்தை வாரி இறைத்தார். கடந்த 30ம் தேதி நடைபெற்ற திருமணத்தின் போது மாப்பிள்ளை ஊர்வலம் நடந்தது. சேலா பகுதியின் முக்கிய சாலையில் மாப்பிள்ளை ஊரவலமாக அழைத்துச் செல்லப்பட்ட போது திடீரென பண மழை கொட்டியது.
மாப்பிள்ளையின் குடும்பத்தினரும், நண்பர்களும் பணத்தை வாரி இறைத்தனர். பண மழையில் நனைந்த மணமக்கள் பின்னர் ஹெலிகாப்டர் மூலம், கண்ட் என்ற கிராமத்துக்கு பறந்து சென்றனர். மாப்பிள்ளையின் அண்ணன் மணமக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான காரையும் பரிசளித்துள்ளார். இந்தத் திருமணத்தில் வசூலான நன்கொடைகள் 5 கோசாலைக்கு தானமாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு!"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு
கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி!
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா? - உயர்நீதிமன்றம் அதிருப்தி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்