மழையைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தொடர் மழையைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

சென்னையில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “நாளை ஓரளவுதான் மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சென்னையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர். வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் இன்னும் போதிய அளவு மழை பெய்யவில்லை” என்றார்.

       


Advertisement

மேலும், “கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இதனையும் படிக்கலாமே..கனமழை எதிரொலி : சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு    

loading...

Advertisement

Advertisement

Advertisement