தெலங்கானாவில் அடுத்த அதிர்ச்சி - உயிருடன் எரிக்கப்பட்ட மற்றொரு பெண் சடலம் கண்டெடுப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட செய்தியின் அதிர்ச்சி அடங்குவதற்குள், மீண்டுமொரு பெண் சடலம் கண்டெடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

ஹைதராபாத்தின் ஷாத்நகரை சேர்ந்த பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி(26) நேற்றிரவு தனது வீட்டிலிருந்து பணிக்காக கொள்ளுரு கிராமத்திற்கு பைக்கில் அவர் சென்றிருக்கிறார். செல்லும் வழியில் அவரது பைக் திடீரென பஞ்சர் ஆகியுள்ளது. இதையடுத்து தனது சகோதரி பாவ்யாவுக்கு போன் செய்த பிரியங்கா, பைக்கை சரிசெய்ய தனக்கு சிலர் உதவி செய்வதாக கூறியுள்ளார். பின்னர் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. 

       


Advertisement

இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், பிரியங்கா காணாமல் போனது குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு எரிந்த நிலையில் சடலம் ஒன்று, பிரியங்கா வீட்டிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில், அவர் பிரியங்காதான் என்பது உறுதி செய்தனர். பிரியங்கா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளது.

இதனையும் படிக்கலாமே..இளம்பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் - 4 பேர் கைது   

இந்நிலையில், உயிருடன் எரிக்கப்பட்ட நிலையில், 35 வயதுடைய பெண்ணின் சடலம் சித்துலகுட்டா சாலையில் உள்ள ஷாம்ஷபாத் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த சடலம், பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெண் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 


Advertisement

இதனையும் படிக்கலாமே..‘தாயுள்ளம் கொண்ட காவல்துறைக்கு நன்றி’ - அமெரிக்காவிலிருந்து மூதாட்டி எழுதிய கடிதம்

loading...

Advertisement

Advertisement

Advertisement