யோகா செய்யும் போதே திருக்குறளை சொல்லி அசத்தும் எல்.கே.ஜி சிறுமி! 

dharmapuri-girl-top-in-yoga

தருமபுரியை சேர்ந்த எல்.கே.ஜி பயிலும் சிறுமி, யோகா செய்து கொண்டே, பல்வேறு நாட்டின் கொடிகள் மற்றும் திருக்குறளை சொல்லி, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.


Advertisement

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்-அனிதா தம்பதியினரின் மகள் பிரகதிஸ்ரீ. இவர் மழலையர் வகுப்பில் பயின்று வருகிறார். இவர் யோகா கலையில் உள்ள பல்வேறு ஆசனங்களை அறிந்து கொண்டு, சிறு வயதிலேயே சிறந்த முறையில் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். குழந்தையின் பெற்றோர் பிள்ளையை எப்படியாவது, சாதிக்க வைக்க வேண்டும் என எண்ணி, உலக நாடுகளின் கொடிகள் உள்ள தாளை வீட்டின் கதவில் ஒட்டி சிறுமிக்கு கற்று கொடுத்து வந்துள்ளனர். அதேப்போல் திருக்குறளையும் கற்றுக் கொடுத்துள்ளனர்.

                                     


Advertisement

இந்த சிறுமி தான் கற்றுக் கொண்ட யோக கலையினை செய்யும் போது, கொடியைக் காட்டினால் போதும், அது எந்த நாட்டு கொடி என சொல்கிறார். சிறுவயதில் பிரகதிஸ்ரீ யோகாவில் காட்டும் ஆர்வம் மற்றும் பயிற்சிகளை கண்டு இந்திய சாதனை புத்தகம், இந்த சிறுமிக்கு விருதுகள், பாராட்டு சான்றுகளை வழங்கியுள்ளது. இதையறிந்த சிறுமி படிக்கும் பள்ளி நிர்வாகம், சக பள்ளி மாணவ, மாணவிகளிடம் யோகா செய்து காட்டச்சொல்லி திறமையை வெளிப்படுத்தினர்.  தொடர்ந்து சிறுமியின் சாதனையை பாராட்டி பள்ளியின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

           

குறிப்பாக யோகாசனம் செய்து கொண்டு பல்வேறு நாடுகளின் கொடிகளின் வண்ணங்களை பார்த்து அந்த நாடுகளின் பெயர்களை கூறியதை பலரும் பாராட்டினர்.  தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்ற இந்த சிறுமியின் இலட்சியம், நன்றாக படித்து மருத்துவராக, தங்கள் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்ப்பது தான்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement