சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் - சிசிடிவி காட்சி வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை ராயபுரத்தில் இரவு நேரத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றித்திரியும் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.


Advertisement

ராயபுரம் கிரேஷ் கார்டனில் கஞ்சா போதையில் 3 இளைஞர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்தனர். 


Advertisement

அதில், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஜயன், சூர்யா மற்றும் எண்ணூரில் வசிக்கும் மனோ ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

 

அண்மையில் சென்னை விருகம்பாக்கத்தில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement