ரிஷப் பன்ட் மற்றும் சாம்சன் ஆட்டத்தை பொறுத்தே தோனியின் முடிவு இருக்கும்- விவிஎஸ் லட்சுமண்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரிஷப் மற்றும் சாம்சான் ஆகியோரின் ஆட்டத்தை பொருத்தே தோனி தனது முடிவை அறிவிப்பார் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்பு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தோனி மீண்டும் எப்போது கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.


Advertisement

‘திருமணமாகும் வரை எல்லா ஆண்களும் சிங்கங்களே’ - தோனி ஓபன் டாக்

இந்நிலையில் தோனியின் எதிர்கால முடிவு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “என்னை பொருத்துவரை ரிஷப் பன்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் ஆட்டத்தை பார்த்தே தோனி தனது முடிவை அறிவிப்பார். அதுவும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு தான் அவர் தனது முடிவை எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement

“எல்லோரையும் போல தோல்வியால் நானும் அவதிப்படுவேன்”- மனம் திறந்த கோலி..!

முன்னதாக நேற்று மும்பையில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற தோனி தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு, “இது குறித்து ஜனவரி வரை என்னிடம் கேட்காதீர்கள்” எனக் கூறியிருந்தார். இதனால் தோனி எதை மனதில் வைத்து இந்தப் பதிலை அளித்தார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. தற்போது இதுகுறித்து விவிஎஸ் லட்சுமண் தெரிவித்துள்ள கருத்து ஒரு சிறிய தெளிவை ஏற்படுத்தியுள்ளது. 

மீண்டும் களமிறங்குகிறார் தோனி - எந்த தொடரில் தெரியுமா?

ஏனென்றால் 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி ரிஷப் பன்ட் அல்லது சஞ்சு சாம்சான் ஆகிய இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் இவர்கள் இருவரும் அதற்குள் சரியாக விளையாடாத பட்சத்தில் மீண்டும் தோனி அணியில் களமிறங்க வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சுமணின் கருத்தும் இதனை பிரதிபளிக்கும் விதிமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement