மேற்கு வங்கத்தின் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் காரக்பூர் சதார், கரீம்பூர், கலியா கஞ்ச் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காரக்பூர் சதார், கலியா கஞ்ச் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு தொகுதியான கரீம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கலியா கஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் தபான் தேப் சின்ஹா, பாஜகவின் கமல் சந்திரசேகரை 2417 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல், காரக்பூர் சதார் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் சர்கர், பாஜக வேட்பாளர் பிரேம் சந்திரஜாவை 20,788 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கரீம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் பிமலேந்து சின்ஹா பாஜகவின் ஜெய் பிரகாஷ் மஜூம்தரை விட 23000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “எங்கள் வெற்றியை வங்காள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். இது மதசார்பின்மை மற்றும் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. பாஜக தனது அதிகார ஆணவ போக்கிற்காகவும், மாநில மக்களை அவமதித்ததற்காகவும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த மண்ணின் மக்களை அவமரியாதை செய்ததன் பலனை பாஜக அனுபவிக்கிறது. சிபிஎம் மற்றும் காங்கிரஸ், தங்களை பலப்படுத்த முயற்சிப்பதற்கு பதிலாக, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு உதவுகின்றன” எனத் தெரிவித்தார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!