JUST IN

Advertisement

கோவை இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்குதண்டனையை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் 2010ம் ஆண்டு 10 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது


Advertisement

2010ம் ஆண்டு கோவையில் பள்ளிக்கு செல்வதற்காக காத்திருந்த 10 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவனை அவ்வழியே வாடகை காரில் வந்த இருவர் கடத்திச் சென்றனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவர்கள், அதன்பின், குழந்தைகள் இருவரையும் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர். இந்தக்கொலை வழக்கில் கார் ஓட்டுநர் மோகன், மற்றும் அவரது நண்பன் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்றதாக மோகன் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டான். 


Advertisement

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டன. இதனை எதிர்த்து மனோகரன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் மனோகரனின் மேல்முறையீடு ரத்து செய்து தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 

இதனையடுத்து டிசம்பர் 2ம் தேதி மனோகரனை தூக்கிலிடுமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை என மனோகரன் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்துள்ளது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement