புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 புதிய மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தின் பெரிய மாவட்டமான வேலூரைப் பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை தலைமையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டு, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இவ்விரு மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளைத் தொடங்கும்வகையில், இன்று தொடக்க விழா நடைபெறுகிறது.
35 வது மாவட்டமான திருப்பத்தூரை, அங்குள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, 36 வது மாவட்டமான ராணிப்பேட்டையின் தொடக்கவிழா, ராணிப்பேட்டை கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது.
தாய் மாவட்டமான வேலூரிலிருந்து திருப்பத்தூரும், ராணிப்பேட்டையும் விடைபெற்றுக் கொள்ளும் இந்த விழாக்களில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Loading More post
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்
“விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கண்ணீர் விட்டு அழுத வடிவேலு
விவேக்கின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்பு!
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
“விவேக் என்ற நல்ல மனிதரை இழந்துவிட்டோம்” - திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி