கின்னஸ் சாதனை முயற்சிக்காக அதிக நிமிடங்கள் யோகா செய்த 3 சிறுவர்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கின்னஸ் சாதனை‌ புத்தகத்தில் இடம்பெறும் விதமாக சிவகங்கையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் அதிக நிமிடங்கள் யோகா செய்து அசத்தியுள்ளனர்.


Advertisement

உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முன்னிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் இந்த சாதனையை நிகழ்ச்சியை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 10 வயதான‌ பிரனவ், 1 நிமிடத்தில் 116 ஜம்பிங் ஜாக்ஸ் எனும் உடற்பயிற்சியை செய்து, ஏற்கெனவே இருந்த உலக சாதனையை முறியடித்தார். 5 வயதான பிரனீத் 35 நிமிடம் 10 விநாடிகள் சக்கர ஆசனத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார்.


Advertisement

இதேபோல் 8 வயது சிறுவனான ராகவ், வயிற்றில் 3 கிலோ எடையை வைத்துக்கொண்டு 30 நிமிடம் 55 விநாடிகள் சக்கராசனத்தில் இருந்து ஏற்கெனவே இருந்த சாதனையை முறியடித்தார். சகோதரர்களாகி‌ய பிரனவ் குமார், பிரனீத் குமார் மற்றும் ராகவ் அய்யனார் ஆகியோரை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சோழன் உலக புத்தக நிறுவன சான்றிதழை வழங்கினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement