மகாராஷ்டிரா அமைச்சரவையில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடங்கள்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிவசேனா கூட்டணியில் மகாராஷ்டிராவில் அமையவுள்ள அமைச்சரவையில் துறைகள் பங்கீடு இன்னும் இரு தினங்களில் முடிவாகும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாலாசாகேப் தோரத் தெரிவித்துள்ளார்.


Advertisement

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிரா ‘விகாஸ் அகாதி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. மகாராஷ்டிராவின் முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் துணை முதலமைச்சர், சபாநாயகர் யார், அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு, மூன்று கட்சிகளுக்கும் அதில் பங்கீடு எவ்வளவு போன்றவை குறித்து இன்னும் இரு தினங்களில் முடிவாகும் என பாலாசாகேப் தோரத் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு பதிலளித்த அவர், அது குறித்து இன்னும் முடிவாகவில்லை என தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement