[X] Close >

அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Heavy-Rain-may-chance-for-next-4-days-over-tamilnadu

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் தென் தமிழகம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கனமழையும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவெளிவிட்டு பரவலாகவும் மழை பெய்கிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Advertisement

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம்,‌ ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒருசில‌ மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு‌மையம் தெரிவித்துள்ளது.‌ குமரிக்கடல் பகுதியில் சூறை காற்று வீச வாய்ப்புள்ளதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை‌ விடுக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 7 சென்டிமீட்டர் மழையும், ராமநாதபுரத்தில் 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்பகுதியில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால், அரிச்சல் முனையின் பெரும்பாலான பகுதிகள் மூழ்கிய நிலையில் சாலையோர தடுப்புச் சுவரும் கடல் நீரில் அரிப்பு ஏற்பட்டு உடைந்து வருகிறது. இதனால் அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்றால் மீன்பிடி சாதனங்கள் வைக்கப்படும் கொட்டகைகள் நீரில் மூழ்கின. படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்தன. மேலும் வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close