மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மக்களவையில் அரசு விளக்கமளித்துள்ளது.
மக்களவையில் எம்.பி. ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை 70 ஆக உயர்த்துவது குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான கால வரம்பு 33 ஆண்டுகள் பணி சேவை அல்லது 60 வயது என்ற புதிய கருத்துருவை கொண்டு வருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைதானா எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 70 ஆக அதிகரிப்பது குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். ஊழியர்களின் பணி காலத்தை 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது , இவற்றில் எது முதலில் வருகிறதோ அப்போது ஓய்வு என கொண்டுவர அரசிடம் எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்