“மக்களவை பாதுகாவலர்கள் எங்களை பிடித்து தள்ளிவிட்டனர்”- பெண் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவை பாதுகாவலர்கள் தங்களை பிடித்து தள்ளிவிட்டனர் என்று கரூர் மக்களவை எம்பி ஜோதிமணி மற்றும் எம்.பி ரம்யா ஹரிதாஸ் ஆகிய இருவரும் குற்றம்சாட்டியுள்ளார். 


Advertisement

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை காலை குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது. இதனையடுத்து பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார். அத்துடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நாளை வர உள்ளது. 


Advertisement

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அமளியில் ஈடுபட்டவர்களை, மக்களவை பாதுகாவலர்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகிலிருந்து அப்புறப்படுத்தினர். அதில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் எம்பி ரம்யா ஹரிதாஸ் ஆகிய இரு பெண் எம்பிக்களையும் பாதுகாவலர்கள் பிடித்து இழுத்து தள்ளியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து கரூர் எம்பி ஜோதிமணி, “மக்களவையில் மகாராஷ்டிரா அரசியல் சூழல் தொடர்பாக நாங்கள் முழக்கம் எழுப்பியபோது, என்னையும் சக எம்பியுமான ரம்யா ஹரிதாஸையும் பாதுகாவலர்கள் பிடித்துத் தள்ளினர்” எனத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி, சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் புகார் அளித்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement