நவ.27ல் விண்ணில் ஏவப்படுகிறது கார்டோசாட்-3 செயற்கைக்கோள் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவிற்கு சொந்தமான 13 ‘நானோ’ செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி47  ராக்கெட் வரும் 27ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


Advertisement

Image result for pslv c47"

இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள் என மொத்தம் 14 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வரும் 27 ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளை இஸ்ரோ விஞ்ஞனிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Image result for pslv c47"

பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலம் நவம்பர் 27ம் தேதி காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட்டானது பி.எஸ்.எல்.வி வகையில் 21வது ராக்கெட்டாகும். இதேபோல், ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 74வது ராக்கெட் ஆகும். 

ராக்கெட்டில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான ‘கார்டோசாட்-3’ ஒரு மேம்படுத்தப்பட்ட செயற்கைகோள். இது புவி கண்காணிப்பு, தொலையுணர்வுக்காக பயன்படுத்தப்படும். இதேபோல் துல்லியமான படங்களை படம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement