ஐதராபாத் தியேட்டரில் மகேஷ் பாபுவுக்கு 81 அடி உயர கட் அவுட்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகேஷ் பாபு நடித்துள்ள ’சரிலேரு நீகேவாரு’ படத்துக்காக அவரது ரசிகர்கள் 81 அடி கட் அவுட்டை ஐதராபாத்தில் உள்ள தியேட்டரில் வைத்துள்ளனர்.


Advertisement

தெலுங்கு சினிமாவின் ’பிரின்ஸ்’ மகேஸ்பாபு. அங்குள்ள டாப் ஹீரோக்களில் ஒருவரான இவர், தற்போது நடித்துள்ள படம், ’சரிலேரு நீகேவாரு’. இதில் அஜய் என்ற ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனில் ரவிபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திரபிரசாத், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்குள்ளாகவே ரசிகர்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர். 


Advertisement

மகேஷ் பாபு நடிக்கும் படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனாலும் அவருக்கு ராசியானதாக இருக்கிறது, ஐதராபாத்தில் உள்ள ’சுதர்சன் 35 எம்எம்’ என்ற தியேட்டர். மகேஷ் பாபு நடித்துள்ள பல படங்கள், இந்த தியேட்டரில் வசூல் சாதனை படைத்துள்ளன. இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் இந்த தியேட்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ’சரிலேரு நீகேவாரு’ பட ரிலீசுக்காக, இந்த தியேட்டரில் 81 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர். மிக உயரமான இந்த கட் அவுட் ஐதராபாத்தில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement