மகாராஷ்டிராவில் பாஜக அரசமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
மகாராஷ்டிராவில் பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை இன்று நடைபெற்றது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, ஆளுநர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர். மிகவும் காரசாரமாக வாதங்கள் முன் வைக்கப்பட்டன. நீதிபதிகளும் பல கேள்விகளை எழுப்பினர்.
அனைத்து வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாளை காலை 10.30 மணி உத்தரவை பிறப்பிக்கின்றனர். இதனிடையே வாதாடிய பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘சபாநாயகரை தேர்வு செய்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளார்’ எனத் தெரிவித்தார்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’