சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதி கேட்டும் பாதுகாப்பு கோரியும் கேரள போலீஸாருக்கு சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா கடிதம் எழுதியுள்ளார். ஆனால், ரெஹானா பாத்திமாவுக்கு அனுமதியும் பாதுகாப்பும் தர முடியாது என்று கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கிய பின்னர், முதலில் சென்ற பெண் ரெஹானா பாத்திமா. ஒரு பெண் பத்திரிகையாளர் மற்றும் பாத்திமா இருவரும் சபரிமலை சென்றபோது அங்கு ஐயப்ப பக்தர்களால் தடுத்து அனுப்பப்பட்டனர். இதையும் மீறி ரெஹானா பாத்திமாவும், பெண் பத்திரிக்கையாளரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ரெஹானா பாத்திமாவுக்கு போலீஸ் உடை அணிவித்து ஐ.ஜி. தலைமையிலான பாதுகாப்போடு பம்பாவில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டனர்.
பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து போலீஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து ரெஹானா பாத்திமாவும், உடன் வந்த பெண் பத்திரிக்கையாளரையும் திருப்பி அனுப்பினர்.
இந்தாண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்கு தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேரள காவல்துறைக்கு மனு அனுப்பியுள்ளார் ரெஹானா பாத்திமா. ஆனால் ரெஹானா பாத்திமாவுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்க முடியாது என காவல்துறை மறுத்துள்ளது. இது குறித்து பேசிய கேரள மாநிலக் காவல்துறையின் முக்கிய அதிகாரியான ஒருவர் "பெண்ணியவாதிகளுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் சபரிமலையில் இடமில்லை. சபரிமலை ஐயப்பன் கோவில் புரட்சி செய்வதற்கான இடமில்லை என மாநில அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது" என கூறினார்.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்